நான்தான், பயப்படாதிருங்கள்

இயேசுவை கரையிலேயே விட்டு விட்டு பிரயாணம் செய்த சீஷர்கள் ஏறக்குறைய 8-9 மணி நேரம் நடுக்கடலிலே எதிர்க்காற்று மற்றும் அலைகளினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்து வந்து "திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்" என்று பேசினதை இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 22. இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். 24. அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. 25. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26. அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27. உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார் - மத்தேயு 14:22-27


இதில் பலவிதமான பாடங்கள் இருந்தாலும், பேதுரு "ஆண்டவரே! நீரேயானால்" என்ற அழைத்ததில் பிரமிக்கதக்க உண்மை இருக்க தான் செய்கிறது - 28. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29. அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். 30. காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். 31. உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். 32. அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள் - மத்தேயு 14:28-33


பேதுருவும் மற்ற சீஷர்களும் காற்றில் அலைகிற  படகில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் பொழுது, இரவின் நாலாம் ஜாமத்திலே கடலின் மேல் நடந்து வந்து கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவை பார்த்து சீஷர்களுக்கு பெருத்த ஐயம், அதனால் தான் கலக்கமடைந்து பயத்தினால் அலறினார்களாம்.


அந்த காலத்திலும் அநேக பிசாசுகள் தெய்வங்களாக இருந்தன, குறிப்பாக தேசத்தை ஆளுகிற ரோமர்களால் பல தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அப்படிபட்ட சூழ்நிலையில் தான் பேதுரு அவரை நோக்கி "ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்" என்று சொன்னனான்.


அதாவது இந்த உலகத்தில் எத்தனையோ பிசாசுகள் தெய்வங்களாக இருக்கின்றன, ஆனால் என்னை ஜலத்தின்மேல் நடக்கவைக்க மெய்யான தெய்வத்தால் தான் முடியும், அப்படி நான் நடந்தால் எங்கள் முன்பாக நிற்பது இயேசு கிறிஸ்துவாகிய நீர் தான் என்பதை நிச்சியக்க முடியும் என்பதே. அதற்கு பதில் அளித்த இயேசு கிறிஸ்து பேதுருவையும் ஜலத்தின்மேல் நடக்க வைத்து தான் தான் மெய்யான தெய்வம் என்பதை நிரூபித்தார்