மூன்று மேய்ப்பர்கள்
யாக்கோபு தன்னை ஆசிர்வதித்த தேவனோடு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டார் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம், இது தான் வேதாகமத்தில் சொல்லப்பட்ட முதல் தசமபாக பொருத்தனையாகும். ஏன் மனித வரலாற்றிலேயே கூட இதுதான் முதல் பொருத்தனை சம்பவம் ஆகும், இந்த பொருத்தனையின் முதல் காரியமே "தேவன் என்னோடே இருந்து" என்பதாகும் - 20.அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, 21.என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; 22.நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான் - ஆதியாகமம் 28:20-22
இந்த பொருத்தனையின் படி, தேவன் யாக்கோபோடு இருந்தார் என்பதை தான் வேதாகமத்தில் பார்க்கிறோம், இங்கு திரியேக தேவன், யாக்கோபை மூன்று மேய்ப்பர்களாக சந்தித்தார் என்று பார்க்கிறோம் - 1.யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். 2.அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. 3.அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். 4.யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள் - ஆதியாகமம் 29:1-4
இப்படி தன்னை சந்தித்த மூன்று மேய்ப்பர்களிடம், யாக்கோபு பெத்துவேலின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்பதற்க்கு பதிலாக, நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டது, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்த கேள்வியாகவே இருக்கிறது - 5.அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். 6.அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். 7.அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர்காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். 8.அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். 9.அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள் - ஆதியாகமம் 29:5-9
முறைப்படி, யாக்கோபு தன்னை சந்தித்த மூன்று மேய்ப்பர்களிடம், பெத்துவேலின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று தான் கேட்டிருக்க வேண்டும், அப்படி தான் ஈசாக்கு யாக்கோபை சொல்லி அனுப்பியிருந்தார் - 1.ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், 2.எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். 3.சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி; 4.தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி; 5.ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான் - ஆதியாகமம் 28:1-5
அப்பொழுது, யாக்கோபு இயேசு கிறிஸ்து செய்ய போகும் காரியத்தை, தீர்க்கதரிசனமாக செய்துக்காட்டினார், அதாவது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினார் என்று பார்க்கிறோம் - யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் - ஆதியாகமம் 29:10