பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?
இஸ்ரவேல் தேசத்தில், வெயில் காலத்தில் அதிக பட்சமாக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வெளிச்சம் இருக்கும், அதே போல் குளிர் காலத்தில் குறைந்த பட்சமாக 10 மணி நேரம் தான் வெளிச்சம் இருக்கும், ஆனால் வருடத்தில் ஒரே ஒரு நாள் தான் சரியாக 12 மணி நேரம் வெளிச்சம் இருக்கும், அதனால் இயேசு கிறிஸ்து "பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?" என்ற கேட்ட கேள்வியில் இருந்து கர்த்தர் லாசருவை உயிரோடு எழுப்பின நாளை கணக்கிட முடியும். அது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பஸ்காபண்டிகைக்கு முந்தின மாதமான மார்ச் மாதத்தின் மத்தியில் வருகிறது.
இப்படி லாசருவை உயிரோடு எழுப்புவதற்கு முன்பு, கர்த்தர் எருசலேமில் இருந்த சமயத்தில், யூதர்கள் அவரை குறித்து பேசின பேச்சு நிச்சியமாவே ஏற்று கொள்ள முடியாத ஒன்று தான் - 20.அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள் - யோவான் 10:20
ஆனால் இயேசுவோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே இருக்கும் பொழுது, யூதர்கள் அவர்களாகவே வந்து இயேசுவிடம் நீர் கிறிஸ்துவா என்று கேள்வி எழுப்பினார்கள் - 21.வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். 22.பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. 23.இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். 24.அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள் - யோவான் 10:24
அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன இயேசுவை கல்லெறிய பார்த்தார்கள் - 25.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 26.ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். 27.என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 28.நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. 29.அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. 30.நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 31.அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். 32.இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 33.யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள் - யோவான் 10:25-33
ஆனால் இயேசுவோ மறுபடியும் வேதவசனங்களை மேற்கோள் காட்டி, தேவனை பிதா என்றும், தன்னுடைய கிரியைகளின் நிமித்தமாவது தான் யாராக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா என்று சொன்னதை பார்க்கலாம் - 34.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35.தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36.பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? 37.என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. 38.செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார் - யோவான் 10:34-38
ஆனால் யூதர்களோ, இயேசு கிறிஸ்துவுக்கு செவி கொடுக்காமல் அவரை கைது செய்ய முயற்சி செய்த பொழுது, கர்த்தர் யோர்தானின் அக்கரைக்கு சென்று அங்கே தங்கினார் - 39.இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, 40.யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக் கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார் - யோவான் 10:37-40
எருசலேம் தேவாலயத்திலிருந்து யோர்தானின் அக்கரை 50 கிமீ தூரத்தில் இருக்கிறது, அப்படியானால் இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுடன் ஏறக்குறைய 12 மணி நேரம் நடந்து தான் யோர்தானின் அக்கரைக்கு சென்றிருக்க வேண்டும்.
அதே சமயத்தில், இயேசு கிறிஸ்து தான் தங்கியிருந்த கப்பர்நகூமுக்கு செல்லாமல் யோர்தானுக்கு அக்கரைக்கு சென்றதற்கு காரணம் அவர் பெத்தானியாவில் ஒரு காரியம் செய்ய வேண்டியதாயிருந்தது.
இப்படி இயேசு கிறிஸ்து யோர்தானுக்கு அக்கரையில் இருக்கும் பொழுது தான், பெத்தானியாவில் இருந்து மரியாளும் மார்த்தாளும் தன் சகோதரனாகிய லாசரு வியாதிப்பட்டிருக்கும் செய்தியை இயேசுவிடம் சொல்ல ஆள் அனுப்பினார்கள், யூதர்களின் கைக்குத் தப்பி சென்ற இயேசு தங்கியிருந்த இடத்தை மரியாளும் மார்த்தாளும் அறிந்திருந்தார்கள் என்றால் அவர்கள் இயேசுவுடன் எவ்வளவு நெருங்கிய ஐக்கியத்தில் இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் - 1.மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். 2.கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான். 3.அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். 4.இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். 5.இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். 6.அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார் - யோவான் 11:1-6
பெத்தானியா என்பது எருசலேமின் ஒரு பகுதியாக தான் இருக்கிறது, அப்படி என்றால் மரியாளும் மார்த்தாளும் அனுப்பிய ஆள் 12 மணி நேரம் அதாவது ஒரு பகல் முழுவதும் நடந்து சென்று தான் இயேசுவிடம் செய்தியை அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால் அவன் திரும்பி வருவதற்குள், லாசரு மரித்து அடக்கமும் முடிந்து விட்டது, இப்படி மரித்து அடக்கம் செய்யப்பட்ட பிறகு, விசாரிக்க சென்றவன் வந்து "லாசருவின் வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கும்" என்று சொன்னால், அது மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் எவ்வளவாய் ஒரு போராட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும்.
அப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் தான், இயேசு சீஷர்களிடம் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார் - 7.அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். 8.அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள். 9.இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். 10.ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார். 11.இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். 12.அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13.இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். 14.அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; 15.நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். 16.அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான் - யோவான் 11:7-16
இப்படி லாசருவை உயிரோடு எழுப்ப சென்ற பொழுது இயேசு கிறிஸ்து கேட்டது தான் "பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? என்கிற கேள்வி, இந்த சம்பவம் எல்லாம் பஸ்காபண்டிகைக்கு முன்பு நடந்ததாக குறிக்கப்பட்டுள்ளது, இதில் வியப்பான காரியம் என்னவென்றால் பஸ்காபண்டிகைக்கு முந்தின மாதத்தில் மட்டும் தான், அதாவது மார்ச் மாதத்தில் தான் இஸ்ரவேல் தேசத்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வெளிச்சமாக இருக்கும், பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 11 மணி நேரமும், ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வெளிச்சமும் இருக்கும் - யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள் - யோவான் 11:55
அதிலும் மார்ச் மாதத்தின் மத்தியில் பகலின் நேரம் மிகத்துல்லியமாக 12 மணி நேரம் இருப்பதை பார்க்கும் பொழுது இயேசு கிறிஸ்து எந்த நாட்களில் லாசருவை உயிரோடே எழுப்பினார் என்பதையும் அறிந்துக்கொள்ளலாம்.
இப்படி மூன்றாவது நாளில் வந்த இயேசுவிடம், லாசரு மரித்து நாலுநாளாயிற்றே என்று மார்த்தாள் சொன்னதிலிருந்து லாசரு மரித்துபோன நாளை நாம் கணக்கிட முடியும், நிச்சியமாகவே மரியாளும் மார்த்தாளும் இயேசுவிடம் என்று ஆள் அனுப்பினார்களோ அன்றே லாசரு மரித்து போயிருக்க வேண்டும் - இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள் - யோவான் 11:39
அது மாத்திரம் இல்லாமல், லாசரு மரித்த அன்றே அடக்கமும் பண்ணப்பட்டிருக்க வேண்டும் - இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார் - யோவான் 11:17
லாசரு மரித்து அடக்கமும் முடிந்து விட்டது, இப்படி மரித்து அடக்கம் செய்யப்பட்ட பிறகு, விசாரிக்க சென்றவன் வந்து "லாசருவின் வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கும்" என்று சொன்னால், அது மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் எவ்வளவாய் ஒரு போராட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும்.
மார்த்தாள்
யோர்தானுக்கு அக்கரையிலிருந்து பெத்தானியாவுக்கு ஏறக்குறைய 45 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த கர்த்தர் ஏன் கிராமத்திற்குள் வராமல் மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்? தேவன் எதிர்பார்த்த அர்பணிப்பு மார்த்தாளிடம் குறைவு பட்டத்தினால் தானே, அவரை சந்தித்த மார்த்தாளின் விசுவாச அறிக்கை ஆச்சரியமாக இருந்தாளும், மரியாளை போல தேவகுமாரனின் பாதத்தில் விழுவும் இல்லை, தன் இருதயத்தில் இருந்த பாரத்தை மரியாளை போல அழுது அறிக்கை பண்ணவும் இல்லை - 17.இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். 18.பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. 19.யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். 20.இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். 21.மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22.இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23.இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24.அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். 25.இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26.உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27.அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 28.இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை ரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். 29.அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள். 30.இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார் - யோவான் 11:28-30
மரியாள்
தேவன் எதிர்பார்க்கிற அர்பணிப்பு இல்லாமல் அவர் முன்பு நிற்பது கூடாத காரியம் அதனால் தான் மார்த்தாள் அங்கிருந்து விலகி மரியாளை அழைக்க நேர்ந்தது (மரியாளிடம் வந்து போதகர் உன்னை அழைக்கிறார் என்றாள்). இயேசு தன்னை அழைக்கிறார் என்ற செய்தியை கேட்ட மரியாள் உடனே எழுந்து இயேசு காண செல்கிறாள், இயேசுவை கண்டவுடன் அவரின் பாதத்தில் விழுந்தது தேவனுக்குரிய கணத்தை செலுத்துகிறாள், பின்பு தன் மன பாரங்களை கண்ணீராக இயேசுவினடம் அர்பணிக்கிறாள். இப்படி மார்த்தாள் மற்றும் மரியாளின் விசுவாச அறிக்கைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், மரியாளின் செயல் இயேசுவை தெய்வம் என்று எல்லோர் முன்பும் அறிக்கை செய்வதாக இருந்தது - 31.அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள். 32.இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். 33.அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: 34.அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35.இயேசு கண்ணீர் விட்டார் - யோவான் 11:31-35
மரியாளின் செயல் தேவனின் ஆலோசனையை நிறைவேற்றுவதாகவே இருந்தது - நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள் - சங்கீதம் 95:6
நிச்சியமாகவே நாம் மரியாளை போல் இருக்க வேண்டும் என்பதினாலும், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள வேண்டும் என்பதினாலும் தான் இந்த காரியங்களை தேவஆவியானவர் நமக்காக எழுதி வைத்துள்ளார் - 36.அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! 37.அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். 38.அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39.இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். 40.இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். 41.அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 42.நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். 43.இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44.அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார் - யோவான் 11:36-44
மரியாளும் மார்த்தாளும் நன்றாகவே அறிந்திருப்பார்கள்
மார்த்தாளும் மரியாளும் வாழ்ந்த பெத்தானியா எருசலேமுக்கு மிக அருகாமையில் தான் இருந்தது, அதனால் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் இல்லை என்ற யூதர்களின் பிரச்சாரங்களையும், இயேசு கிறிஸ்துவை கல்லெறிய பார்த்ததையும் மார்த்தாளும் மரியாளும் நன்றாகவே அறிந்திருப்பார்கள், அப்படி இருந்தும் அவர்கள் கர்த்தர் மேல் இருந்த விசுவாசத்தை விட வில்லை - பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது - யோவான் 11:18
கல்லெறிய பார்த்த சம்பவம் எவ்வளவு ஆபத்தானது
எருசலேமில் இயேசுவை கல்லெறிய பார்த்த சம்பவம் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தது என்பதை சீஷர்களின் பேச்சில் இருந்து அறிந்து கொள்ளலாம் - அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள் - யோவான் 11:6-7
அப்படி அவர்கள் இயேசுவை கல்லெறிய பார்த்தது கொலை முயற்சியாகவே இருந்தது என்பதை அவர்கள் பேச்சில் இருந்து அறிந்துக் கொள்ளலாம் - அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான் - யோவான் 11:16
சிநேகிதனாகிய லாசரு
ஏன் லாசருவின் அடக்கத்திற்கு மார்த்தாள் மற்றும் மரியாளின் சிநேகிதர்கள்/அறிமுகமானவர்கள் மாத்திரம் வந்திருந்தார்கள்? ஏன் லாசருவின் சிநேகிதர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என்று யாரை குறித்தும் சொல்லப்படவில்லை? - யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள் - யோவான் 11:19
இதற்கு காரணம் லாசரு இயேசு கிறிஸ்துவின் சிநேகிதனாக மாறி விட்டதினால் தான், ஒருவன் இயேசு கிறிஸ்துவின் சிநேகிதனாக இருந்தால் உலகத்தார் நண்பர்களாக இருக்க வாய்ப்பு இல்லை - இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார் - யோவான் 11:11
நீர் இங்கே இருந்தீரானால்
மார்த்தாள், மரியாள் இரண்டு பேருமே "நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்" என்று அறிக்கை செய்திருந்தார்கள், அது உண்மை தான் இயேசு கிறிஸ்துவும் தன் சீஷர்களிடம் "நான் அங்கே இராததினால்" என்று சொல்லியிருந்தார்.
மார்த்தாளின் அறிக்கை - மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் - யோவான் 11:22
மரியாளின் அறிக்கை - இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள் - யோவான் 11:33
நான் அங்கே இராததினால்
இந்த காரியங்கள் எல்லாம் நடந்த பொழுது இயேசு கிறிஸ்து பெத்தானியாவுக்கு செல்லாமலும், அதே சமயத்தில் அதிக தூரத்தில் இருந்த கலிலேயாவிற்கு செல்லாமலும், ஒரு நாள் பயண தூரத்தில் இருந்த யோர்தானுக்கு அருகே தங்கியிருந்தது சீஷர்கள் கர்த்தரின் மேலுள்ள விசுவாசத்தில் பலப்பட வேண்டும் என்ற காரணத்தினால் தான் - 14.அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; 15.நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார் - யோவான் 11:14-15
நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ
மார்த்தாள் இயேசுவை தேவகுமாரனாகிய கிறிஸ்து, என்று அறிக்கை செய்கிறவளாக இருந்தாலும், இயேசு தான் தேவன் என்பதை அறியாமல் இருந்தால், மரியாளை பொறுத்த வரை இயேசு தேவனால் அபிஷேகம் ஒரு விசேஷித்த நபர், ஆனால் மரியாளுக்கோ இயேசுவே தேவன், அவரை காட்டிலும் பெரியவர் ஒருவரும் இல்லை.
21.மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22.இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள் - யோவான் 11:21-22
அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து - யோவான் 11:33
இதை விசுவாசிக்கிறாயா
மார்த்தாளின் அவிசுவாசம், கர்த்தர் அவளிடம் விசுவாசத்தை குறித்து பேசவும் கேட்கவும் செய்தது, ஆனால் மரியாளின் விசுவாசம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று பலரும் அறிந்துக் கொள்ள செய்தது.
25.இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26.உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27.அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள் - யோவான் 11:25-27
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார் - யோவான் 11:40
மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள்
எல்லா இடங்களிலும் மார்த்தாளை ஒரு விசுவாசியாக, இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறவளாக மேற்கோள் காட்டிய வேதாகமம், மார்த்தாள் "நாறுமே, நாலுநாளாயிற்றே" என்று இயேசுடம் சொல்லும்பொழுது அவளை "மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள்" என்று சொல்லி, எக்காரணத்திலும் நாம் அவிசுவாச வார்த்தைகளை பேசி "மரித்த காரியங்களுக்கு பங்குள்ளவர்களாக" இல்லாமல் "உயிர்த்தெழுந்த இயேசுவின் பிள்ளையாக" இருக்க வேண்டும் என்று வேதாகமம் அறிவுருத்துகிறது - இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள் - யோவான் 11:39
திறந்த கல்லறை நாறினதா?
மரித்து நாலுநாளாகி கல்லறையை திறந்தால் நாரும் என்பது உண்மை தான், அதை மார்த்தாளும் அறிந்திருந்தாள், ஆனால் இயேசுவின் வல்லமை எல்லாவற்றையும் மாற்ற வல்லமையுள்ளது - 39.இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். 40.இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். 41.அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 42.நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார் - யோவான் 11:39-42
மரியாளின் விசுவாசத்தின் பலன்
மரியாள் இயேசுவின் பாதத்தில் விழுந்தது ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது, அது அங்கிருக்கிற எல்லோருக்கும் இயேசுவை தெய்வம் என்று அறிக்கை செய்வதாக இருந்தது, அதனால் தான் குறிப்பாக மரியாளிடத்தில் வந்திருந்து இயேசு செய்தவைகளைக் கண்டவர்கள் விசுவாசமுள்ளவர்களானார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது - அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள் - யோவான் 11:45