ஏன் பவுலின் கடிதங்களின் விமரிசிக்கப்படுகின்றன?

ஏன் பவுலின் கடிதங்களின் விமரிசிக்கப்படுகின்றன? முதலாவது பவுலின் மூலமாக தேவன் சொன்ன  காரியங்களை வேறு எந்த புஸ்தகத்திலும் பார்க்க முடியாது, அதிலும் குறிப்பாக பின் சொல்லப்பட்ட காரியங்கள் எல்லா மனுஷரையும் தேவனுடைய ராஜ்யத்திற்க்கு தகுதியற்றவனாக்குகிறது. 

 

3.மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. 4.அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். 5.விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. 6.இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் - எபேசியர் 5:3-6

 

9.அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10.திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 11.உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள் - I கொரிந்தியர் 6:9-11

 

19.மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20.விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21.பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன் - கலாத்தியர் 5:19-21

 


இவைகள் நமது சுயநிதியை சுட்டெரிப்பதாகவும், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ரத்தத்தினால் உண்டாகும் ஆத்ம மீட்பை உணரசெய்வதாகவும் இருக்கிறது, இதை நாம் உணர்ந்துக் கொண்டு, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரட்சிப்பை மாத்திரம் சார்ந்திருப்பவர்களாகவும் இருப்போம்.

 

நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும் - உபாகமம் 31:26