கிறிஸ்துவை குறித்த யோசேப்பின் சொப்பனம்

யோசேப்பின் சொப்பனங்கள் உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையில் நிறைவேறியிருந்ததா? யோசேப்பு இரண்டு சொப்பனங்கள் கண்டதை வேதாகமத்தில் பார்க்கிறோம், ஆனால் யோசேப்பு கண்ட சொப்பனம் அவன் வாழ்க்கையில் உண்மையிலேயே நிறைவேறியிருந்ததா என்பது கேள்விகுறி தான், காரணம் யோசேப்பின் முதல் சொப்பனத்தின் படி அவன் சகோதரர்கள் அவனை இன்னார் என்று அறிந்து, அதாவது யோசேப்பு என்று அறிந்து அவனை சேவிக்க வேண்டும் - 5.யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். 6.அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: 7.நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். 8.அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்- ஆதியாகமம் 37:5-8


யோசேப்பின் இரண்டாம் சொப்பனத்தின் படி அவன் தகப்பனும், தாயாரும், சகோதரர்களும் சேர்ந்து யோசேப்பை சேவிக்க வேண்டும், ஆனால் யோசேப்பு இந்த சொப்பனத்தை காணும் பொழுது அவன் தாயார் ஏற்கனவே மரித்துப் போயிருந்தார், அதன் பின்பு யாக்கோபு யோசேப்பை எகிப்தில் சந்திக்கும் பொழுது  யாக்கோபின் மற்ற மனைவிகளும் கூட மரித்துப் போயிருந்தார்கள் - 9.அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். 10.இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான். 11.அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான் - ஆதியாகமம் 37:5-8


யோசேப்பின் கேள்வி?

யோசேப்பு பானபாத்திரக்காரரின் சொப்பனங்களை விளக்கிச் சொல்லும் பொழுது, தான் சொன்ன விளக்கத்தின் படி தான் காரியம் நடக்கும் என்கிற உறுதியுடன் பேசினார் - 12.அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம். 13.மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; 14.இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். 15.நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான் - ஆதியாகமம் 40:12-15


அதே யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களை குறித்து தன் சகோதர்களிடம் சொல்லும் பொழுதும் கூட, எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் தான் சொன்ன விளக்கத்தின் படி தான் காரியம் நடக்கும் என்கிற உறுதியுடன் பேசினார் - 6.தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். 7.பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார் - ஆதியாகமம் 45:6-7


இப்படிப்பட்ட யோசேப்பு, தான் கண்ட சொப்பனத்தின் படி தன் தகப்பனாகிய யாக்கோபு ன்னை வந்து பணிந்து கொள்வார் என்கிற நம்பிக்கையுடன் தானே இருந்திருக்கவேண்டும், பின்பு ஏன் "என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா?" என்று கேட்டார்? - 26.யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள். 27.அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான். 28.அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள் - ஆதியாகமம் 43:26-28 & யோசேப்பு தன் சகோதரரைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள் - ஆதியாகமம் 45:3


யோசேப்பு தன் சொப்பனங்களை குறித்துச் சொன்ன விளக்கம்

யோசேப்பு தான் இரண்டு சொப்பனங்கள் கண்டு 13 வருடங்கள் ஆகியும் நிறைவேறாத சூழ்நிலையில் தான், பார்வோன் இரண்டு சொப்பனங்களை கண்டிருந்தார் - 17.பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். 18.அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது. 19.அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை. 20.கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. 21.அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். 22.பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். 23.பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது. 24.சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான் - ஆதியாகமம் 41: 17-24


யோசேப்பு பார்வோனின் இரண்டு சொப்பனங்களுக்கும் விளக்கம் சொல்லும் பொழுது, அவைகள் இரண்டும் ஒரே அர்த்தமுள்ளவைகள் என்றும், அவைகள் இரண்டும் ஒரே அர்த்தமுள்ளவைகள் ஆனபடியால் தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்று அறிவுறுத்தினார், இல்லாவிடில் எப்பொழுது செழிப்பான 7 வருடங்கள் துவங்கும் என்றும், எப்பொழுது 7 வருட பஞ்சம் துவங்கும் என்று அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லை - 25.அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். 26.அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே. 27.அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம். 28.பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். 29.எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். 30.அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். 31.வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். 32.இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது - ஆதியாகமம் 41: 17-32

அப்படியெனில், 13 வருடங்களுக்கு முன்பாக யோசேப்பு கண்டு இன்னும் நிறைவேறாத தன் இரண்டு சொப்பனங்களும் வெவ்வேறு அர்த்தமுள்ளவைகள் என்றும், தேவன் அவைகளை இரண்டு வெவ்வேறு காலத்தில் நிறைவேற்றுவார் என்கிற இரகசியத்தை அறிந்துக் கொள்ளலாம்.


யோசேப்பு தன் சொப்பனங்கள் யாரை குறித்தது என்று சொன்ன விளக்கம்    

யோசேப்பின் சொப்பனங்கள் உண்மையிலேயே நிறைவேறியதா என்று சந்தேகப்படும் சூழ்நிலையில் தான் யாக்கோபின் குமாரர்கள் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், காரணம் யோசேப்பின் சொப்பனத்தின் படி அவன் தகப்பனும், தாயாரும் கூட அவனை வணங்க வேண்டும் அது நடக்கவே இல்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவர்கள் தகப்பனாகிய யாக்கோபும் மரித்த போனார், அதனால் கலங்கிய சகோதரர்கள் யோசேப்புக்கு முன்பாகத் தாழ விழுந்து நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள், அப்பொழுது யோசேப்பு கேட்ட "நான் தேவனா?" என்கிற கேள்வி தான் கண்ட சொப்பனங்கள் தேவனுக்குரியது என்கிற பரம இரகசியத்தை வெளிப்படுத்துவதாய் இருந்தது - 14.யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம்பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள். 15.தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, 16.உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். 17.ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். 18.பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். 19.யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா - ஆதியாகமம் 50:14-19


என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது

இப்படி யோசேப்பு கண்ட முதலாம் சொப்பனம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிவிக்கிறதாய் இருந்தது -  5.அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6.அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7.மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். 8.அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, 9.கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள் - லூக்கா 24:5-9


சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது

அதேப்போல யோசேப்பின் இரண்டாவது சொப்பனம், மரித்தோர்களும் கிறிஸ்துவை சந்திக்கும் அவரின் வருகையை முன்னறிவிக்கிறதாய் இருக்கிறது - 14.இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். 15.கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 16.ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17.பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் - I தெசலோனிக்கேயர் 4:14-17