குருடரான வழிகாட்டிகளே!
இயேசு கிறிஸ்து, வேதபாரகரையும் பரிசேயரையும் பார்த்து குருடரான வழிகாட்டிகளே! மதிகேடரே, குருடரே! என்று சொல்லக் காரணம் என்ன? - 16.குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 17.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 18.மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்றும் சொல்லுகிறீர்கள். 19.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? 20.ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 21.தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 22.வானத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான் - மத்தேயு 23:16-22
இதற்கு காரணம், சபையானது தேவனை மகிமைப்படுத்தாமல் மனுஷனை மகிமைப்படுத்த பிரயாசப்பட்டதினால் தான், அதாவது நாம் சிலுவையின் மீட்பைக் காட்டிலும், நம்முடைய வேத ஞானம், கிருபையின் வரங்கள், மனுஷ காரியங்களான நன்கொடைகள், சிபாரிசுகள், பதவிகள் போன்றவைகளை மகிமையாகப் பேசும் பொழுது குருடரான வழிகாட்டிகளாகவும்! மதிகேடராகவும், குருடராகவுமே இருக்கிறோம், இதை இயேசு கிறிஸ்து கேட்ட இந்த இரண்டு கேள்விகளில் இருந்து அறிந்துக் கொள்ளலாம் - பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
அதே சமயத்தில் இயேசு கிறிஸ்து, இந்த காரியங்களை சொல்லும் பொழுது, தேவனே நமக்காக பலியாக போகிறார் என்கிற ரகசியத்தையும் சொல்லியிருந்தார், எப்படியெனில் வானத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான் என்று சொல்லும் பொழுது, இதில் வீற்றிருக்கிறவர் என்பது தேவனையே குறிக்கிறது.
அதே போல தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான் என்று சொல்லும் பொழுது, இதில் வாசமாயிருக்கிறவர் என்பது தேவனையே குறிக்கிறது.
அப்படியென்றால் பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின் பேரிலும் சத்தியம்பண்ணுகிறான் என்று சொல்லும் பொழுது, "அதின்மேலுள்ள எல்லாவற்றின்" என்பதும் தேவனையே குறிக்க வேண்டும் அல்லவா? இப்படி நம்மை மீட்க, தன்னையே சிலுவையில் தந்த, தேவனை மாத்திரமே உயர்த்துவோம்.
அது மாத்திரம் இல்லாமல், வேறெந்த காரியத்திற்க்காகவும் நாம் சத்தியம் பண்ணக் கூடாது என்றும் வேதாகமம் சொல்லுகிறது - 33.அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 35.பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். 36.உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. 37.உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் - மத்தேயு 5:33-37
ஏன் என்றால், சத்தியம் என்பது தேவனுடைய நாமமாகவும், அவருக்கே உரியதாகவும் இருக்கிறது, காரணம் இயேசு கிறிஸ்துவே சத்தியமாய் இருக்கிறார் - 6.அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7.என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார் - யோவான் 14:6-7